காலாண்டு, அரையாண்டு தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு..!!
Jun 16, 2026, 10:15 IST1781585108187
பள்ளிகளுக்கான முதலாவது முக்கியத் தேர்வான காலாண்டுத் தேர்வு, வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டுத் தேர்வு:
இரண்டாம் பருவத்திற்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. தேர்வு முடிவடைந்ததும், டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 3ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றும் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2026-27 கல்வியாண்டின் இறுதிப் பள்ளி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2027 ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

