"ரேசன் கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும்"- விஜய்
சாதி அடிப்படையிலான பாகுபாடு, வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுங்கள் என போலீசாருக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தி நடைபெற்ற மாவட்ட ஆட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், “பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை போதை முறிவு முகாம்கலை நடத்த வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் நோ சேஞ்ச், நோ காம்ப்ரமைஸ். பெண்கள் பாதுகாப்பில் துளியும் சமரசமில்லை. திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் ஆட்சியர்கள் கள ஆய்வு செல்ல வேண்டும். பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறைகள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கோயில், அரசியல் நிகழ்வுகளின்பொது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும், அண்ணாவின் சொல்லான மக்களிடம் செல் என்பதே நமது தாராக மந்திரம். காவல்நிலையம் வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்துங்கள்.
போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெரும்பாலான குற்றங்களுக்கு நில தகராறே முதன்மைக் காரணம். ஒவ்வொரு மாவட்டத்திலும் நில வழக்கு தீர்வு குழு 2 வார இடைவேளையில் கூட்டவும். காவல் நிலையத்திற்கு வரும் மக்களை கண்ணியத்துடன் நடத்தவும். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல், சுரண்டலை அனுமதிக்க கூடாது. ரேசன் கடைகளில் எடை குறைபாடு இல்லாமல் தரமான உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

