சீமானுடன் விஜய் கூட்டணியா?- புஸ்ஸி ஆனந்த் விளக்கம்

 
விஜய் சீமான்

சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முடிவு செய்வார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
அளித்துள்ளார்.

நடிகர் விஜயின் அரசியல் பயணம் : சீமான் வெளியிட்ட தகவல் - ஐபிசி தமிழ்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார். இதையடுத்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலக் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றது தேர்தல் ஆணையம். 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆயத்தமாகிவருகிறது. 

2026-ல் தமிழக முதல்வராக தலைவர் விஜய்யை அமர வைக்க வேண்டும்'- நிர்வாகிகளுக்கு புஸ்ஸி  ஆனந்த் உத்தரவு|bussy anand about vijay and Tamilaga vetri kalagam - Vikatan

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். சட்டசபைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளது. அவசரம் வேண்டாம். வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் எதுவும் நடத்த திட்டமிடப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 தான் இலக்கு. 2026ல் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஜூன் 18ம் தேதி சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல” என்றார்.