தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

 
Bussy Anand

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சென்னையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய  தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். முன் அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதற்காக, ஆனந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.