சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகும் பஞ்சாப் "Cash Party" திருமண வீடியோ!!
பஞ்சாப் மாநிலத்தில் மணமகன் குடும்பத்தினர் பூக்களுக்கு பதிலாக பணத்தை வாரி இறைத்து மணமகளை வரவேற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமகள் அலங்காரத்தோடு வந்து நிற்க மணமகன் குடும்பத்தினர் அவர் மீது பணத்தை மழையாக பொழிகின்றனர். இந்த வீடியோ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கங்களில் பலராலும் பகிரப்படும் விஷயமாக இருக்கிறது. மணமகன் குடும்பத்தினர் மணமகளை வரவேற்கவே 8.5 கோடி ரூபாய் பணத்தை பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மணமகள் அலங்காரத்தோடு திருமண வரவேற்பு நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்து நிற்கிறார். முதலில் மணமகன் தன் கையில் இருக்கும் ரொக்க பணத்தை அவர் மீது தூவுகிறார். அதன் பிறகு மணமகன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை மணமகள் மீது தூவி வரவேற்கின்றனர். இது காண்பதற்கு வானில் இருந்து பணம் மழையாக பொழிவது போல காட்சி தருகிறது.
#Watch | பஞ்சாப்: திருமண வரவேற்பில், மணமகளை பூக்களுக்கு பதிலாக ரூ.8.5 கோடிக்கு ரூபாய் நோட்டுகளை தூவி வரவேற்ற மணமகன் குடும்பத்தினர்! #SunNews | #Punjab | #MarriageReception pic.twitter.com/Nk2WZY6DWJ
— Sun News (@sunnewstamil) February 18, 2026