மாவீரன் பூலித்தேவன் வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குகிறேன் - வானதி சீனிவாசன் ட்வீட்

 
vanathi--srinivas-3

மாவீரன் பூலித்தேவன்  பிறந்த நாளில் அவரின் வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குகிறேன்  என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

yn

ஆங்கிலேயரின் அடிமைத்தளையில் காலம் காலமாக சிக்குண்ட அன்னை பாரதம் தற்போது உரிமை பெற்ற நாடாக, சுதந்திரம் பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்தியா முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும் பாடுபட்டனர். இதில் முதன்மையானவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி, தன்னிகரற்ற தலைவரரக, தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் மாவீரர் பூலித்தேவன் அவர்கள். நெற்கட்டான்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு செங்கோலோச்சி, ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரர் பூலித்தேவன் அவர்கள், இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் "வெள்ளையனே வெளியேறு” என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீரமுழக்கமிட்டவர். ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய பெருமை மாவீரர் பூலித்தேவன் அவர்களையே சாரும்.

vanathi srinivasan

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக வீர முழக்கமிட்டு, இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு முன்னோடியாகக் கருதப்படும், மாவீரன் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் போற்றி வணங்குகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.