மாவீரர் பூலித்தேவருக்கு என் வீரவணக்கம் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 
stalin

மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

tn

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்! நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு! இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! " என்று பதிவிட்டுள்ளார். 


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வீர வாளை உயர்த்தி, மூன்று போர்க்களங்களில் வெள்ளையரை தோற்கடித்து வெற்றிக் கொடி ஏற்றியவர் நெற்கட்டும்செவல் மாமன்னர் மாவீரர் பூலித்தேவர் ஆவார். தமிழ்நாட்டிலேயே முதல் முலில் கழுகுமலைக்கு அருகில் அவருக்கு 1990 ஆம் ஆண்டு சிலையும், மண்டபமும் எழுப்பியது அடியேனும், என் தம்பி இரவிச்சந்திரனும் தான். மாவீரர் பூலித்தேவரின் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நுழைந்த பூலித்தேவர் அப்படியே மறைந்துவிட்டார். அவரது தியாகமும், வீரமும் வணக்கத்திற்கு உரியவை. வாழ்க மாமன்னர் பூலித்தேவர் புகழ்! " என்று குறிப்பிட்டுள்ளார்.