“சொறி பிடித்த நாயெல்லாம் ஓநாய், வெள்ளாட்டை பற்றி பேசுகிறது”- ஈபிஎஸ்-ஐ விமர்சித்த புகழேந்தி

நகராட்சியும் மாநகராட்சியும் தேடுகின்ற வெறி பிடித்த நாய்கள் எல்லாம் ஓநாயும் வெள்ளாடும் பற்றி பேசுகிறது என எடப்பாடி பழனிசாமியை அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி காட்டமாக விமர்சித்தார்.
மறைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “எல்லோருக்கும் முதல்வர் என அழைக்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தேர்தல் நேரத்திலே நீங்கள் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நிச்சயமாக ஆட்சிக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்படும் பொதுமக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் கண்டுபிடித்து சொல்லுவோம் என கூறினீர்கள். 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அதை நிறைவேற்றாமல் உள்ளீர்கள்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரிக்க வேண்டியவரில் எடப்பாடி பழனிசாமியம் அடங்குவார். ஆனால் அவர் இதுவரை விசாரிக்கப்படவில்லை. ஆகவே தமிழ்நாடு அரசும் முதல்வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை உடனடியாக விசாரிக்க வேண்டும். பழனிச்சாமியை விசாரிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்குவோம். எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க வில்லை என்பது மர்மமாக உள்ளது. பதவி ஆசை இல்லாமல் பல ஆண்டுகள் அம்மாவுக்காக அம்மாவோடு பல வழக்குகளை சந்தித்துள்ளேன்.
பணத்தை கொடுத்து கவிதையையும், கட்டுரையையும் வாங்குகிறவர்கள் எல்லாம் அம்மாவை பற்றி பேசுகிறார்கள். நகராட்சியும் மாநகராட்சியும் தேடுகின்ற வெறி நாய்கள் எல்லாம் ஓநாயும் வெள்ளாட்டையும் பற்றி பேசுகின்றது. வெறி நாய்கள் அல்ல சொறி பிடித்த நாய்கள். ஓநாயும் வெள்ளாடும் கூட சேர்ந்து விடும், ஆனால் பழனிசாமி திருந்தவே மாட்டார். திருந்துவதற்கு புத்தி வரவே இல்லை. மேலும் அதிமுகவில் விரிசலை ஏற்படுத்தி அதிமுக சேரவே கூடாது என எடப்பாடி நினைக்கிறார். அம்மா பிறந்தநாளில் மீண்டும் எச்சரிக்கிறேன் எடப்பாடி பழனிசாமி கட்சியை நிச்சயம் அழித்து விடுவார்” என்றார்.