அதிமுக சின்னமும் பெயரும் முடக்கப்பட்டால் அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே- புகழேந்தி

 
Pugalendhi

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பேசிய அவர், “டி.ஜி.பி-யை அவமானப்படுத்தும் வகையில் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறார்களா? என கேட்கும் சி.வி.சண்முகம் சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டவர். சசிகலா யாருன்னு தெரியாது என்று சி.வி.சண்முகம் சொல்கிறார். பெங்களூரில் தண்ணீயை போட்டுவிட்டு சின்னம்மானு சொல்லாத அம்மானு சொல்லு என்றவர் சி.வி சண்முகம். சின்னம்மா காலில் விழுந்து விட்டு எந்திரிக்கவே இல்லை அதெல்லாம் மறந்து விட்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வரம்பு மீறி ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்து வருகிறோர்.

ஓ.பி.எஸ். கட்சியின் சொத்து பத்திரத்தை திருடிவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி திறப்பினர்,எம்ஜிஆர் உத்தரவுப்படி  ஜானகி அவர்கள் கட்சி அலுவலகத்தை ஒப்படைத்தார். விதிகள்படி அதனை யாரும் அபரிக்க முடியாது, அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற இரு நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்யப்படும். கோடநாடு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சையன் எடப்பாடி பழனிச்சாமி பெயரை தெரிவித்த பிறகும் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்யாமல் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. அதிமுக சின்னமும் பெயரும் முடக்கப்பட்டால் அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுகவை முடக்க முயற்சிக்கிறார்” எனக் கூறினார்.