"எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் பாஜக கூட்டணி வேண்டாம் என சொல்வார்களா?"- புகழேந்தி

 
ஓபிஎஸ் அமெரிக்காவிலிருந்து வந்த பிறகுதான் எங்க ஆட்டமே இருக்கு – புகழேந்தி

கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பு  பெங்களூர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொடநாடு விவகாரத்தில் ஓபிஎஸ்ஸூக்கும் சம்பந்தம் உண்டு: புகழேந்தி

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, “பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என ஒரு தரப்பும்,  வேண்டாம் என்று ஒரு தரப்பும் உள்ளதால் அதிமுகவிற்குள் இருதரப்பினரிடையே  எடப்பாடி பழனிச்சாமி சிக்கி கொண்டுள்ளார். ஆகையால் தான் கூட்டணி குறித்து பேச 6 மாதம் நேரம் கேட்டுள்ளார். அதிமுகவை ஒழிக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமி தூங்கமாட்டார். அதிமுக ஒன்றிணையாமல் 2026ல் ஜெயிக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி யாரைத் தான் முதுகில் குத்தவில்லை. 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  இரட்டை இலையை வாங்க முடியாது. மும்மொழிக் கொள்கை எதிர்ப்பிலும் தொகுதியை வரையறை எதிர்ப்பிலும் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நாங்கள் துணையாக நிற்போம். பாஜகவிற்கு அதிமுக ஜால்ராவாக மாறிவிட்டது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் பாஜக கூட்டணி வேண்டாம் என சொல்வார்களா?

புதிய நாடாளுமன்றத்தை திறக்கும் போதே இருக்கைகளை அதிகரித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதனை நிறைவேற்ற தற்போது களம் இறங்கியுள்ளார். 8 எம்பிக்களை எப்படி பறிக்கொடுக்க முடியும், அதற்காக தான் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கொடநாடு வழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று முதல்வர் சொல்ல வேண்டும், எடப்பாடி பழனிச்சாமியை விரைந்து விசாரிக்கவில்லை எனில்,  தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், அவரை விசாரிக்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்றம் செல்வோம்” எனக் கூறினார்.