டாஸ்மாக் கடை அருகே இளைஞர் கொலை - டாஸ்மாக்கை சூறையாடிய மக்கள்!

 
Murder

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே
 முருகேசன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை அருகே நிகழ்ந்த கொலை சம்பவத்தை கண்டித்து மதுக்கடையை சூறையாடியதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. 
குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் முன்விரோதம் காரணமாக முருகேசனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக ஐயப்பனை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரிடம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்