12ம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு..

 
student exam

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வு  திட்டமிட்டபடி நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி,  நாளை (திங்கட்கிழமை) அம்மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுகு  நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு தொடங்குகிறது.

12ம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்  - புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு..

இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பேசுப்பொருள் எழுந்த  நிலையில் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும்,  தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைய உள்ளதை ஒட்டி, திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.   அதேநேரம்  கோவில் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது.