“பாசம் காட்டி மோசம் பண்ணிட்டாங்க... ரூ.80 லட்சம் மோசடி போச்சு”- பிரபல பாடகி கண்ணீருடன் புகார்

 
ச்

தாய், தந்தை இல்லாததால் அடைக்கலம் கொடுப்பது போல் நடித்து கணவன், மனைவி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக கிராமிய பாடகி புகார் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை குசலாக்குடி வீரமுத்து நகரில் வசித்து வருபவர் மகமாயி என்கிற மகா. இவர் கிராமிய பாடல்களை பாடி வருகிறார். மேலும் இவர் youtube இன்ஸ்டாகிராம் facebook ஆகிய சமூக வலைதளத்தில் பிரபலமாகவும் இருந்து வருகிறார். இவரது யூடியூபில் மட்டும் ஒன்றரை லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர். மேலும் மகா உறவினர்கள் யாரும் இல்லாமல் ஆதரவற்று இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த தம்பதியான காயத்ரி கார்த்திக் பாண்டியன் ஆகியோர் மகாவை அரவணைப்பது போல் நடித்து மகாவிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து விட்டதாக கூறி மகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மேலும் இது குறித்து கிராமிய பாடகி மகா கூறுகையில், “புதுகை மகா என்ற பெயரில் கிராமிய கச்சேரி நடத்தி வருகிறேன். இவர் வீட்டின் அருகில் வாசித்து வரும் தம்பதியான காயத்ரி கார்த்திக் பாண்டியன் தனக்கு யாரும் இல்லாமல் ஆதரவற்ற இருப்பதை அறிந்து கொண்டு தன்னை அரவணைப்பது போல் தன்னிடம் பாசம் காட்டி பழகி வந்தனர். தான் கிராமிய கச்சேரிக்கு  செல்லும் பொழுதும் ஒவ்வொரு கச்சேரிக்கு தனக்கு  40000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது. மேலும் தனது கச்சேரியில் காயத்ரி மற்றும் கார்த்திக் பாண்டியன் ஆடியோ ஒளிபரப்பு தொழில் செய்து வந்ததால் அவர்களிடம் தனக்கு பழக்கம் அதிகமானது. மேலும் காயத்ரி மற்றும் கார்த்திக் பாண்டியன் இருவரும் என்னிடம் வந்து தங்களுக்கு கஷ்டம் என்று கூறி உடனடியாக பணம் தேவை என்று கேட்கும் போதெல்லாம் நான் எனது தங்கச்செயின் தோடு மற்றும் பணத்தை கொடுத்து உதவி செய்து வந்தேன்.

இந்நிலையில் நான் ஒவ்வொரு ஊர்களாக சென்று கச்சேரி  நடத்தும் பொழுது அந்த கச்சேரியை எடுத்து எனது சமூக வலைதளங்களில்  பதிவிட்டு அவர்கள் கவனித்து வந்தனர். 
ஒரு கட்டத்தில் சமூகவலைத்தளத்தில் தவறுதலாக சில விஷயத்தை போட்டதால் அதை முடக்கும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அதை சீர் செய்வதற்கு பணம் தேவை என்றும் கூறினார்கள். இதை நம்பி நான் எனக்குத் தெரிந்த பலரிடம் தல 5 லட்சம், மூன்று லட்சம், இரண்டு லட்சம் இப்படி பல பேரிடம் பெற்று ரூபாய் 80 லட்சம் வரை அவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்துள்ளேன். ஒரு கட்டத்தில் அவர்கள் மேலும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் பற்றி வெளியில் விசாரிக்கும் பொழுது தான் அவர்கள் என்னிடம் பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தது எனக்கு தெரியவந்தது.

இதையடுத்து நான் அவர்களிடம் நான் கொடுத்த ரூபாய் 80 லட்சம் பணத்தை திரும்பக் கேட்ட பொழுது அவர்கள் பல்வேறு சாக்கு போக்குகளை கூறி காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் நான் அவர்கள் மீது புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தேன் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை அரவணைப்பது போல் ஏமாற்றிய தம்பதி  என்னிடமிருந்து ரூபாய் 80 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர் நான் பல பேரிடம் கடனாக வாங்கி கொடுத்த ரூபாய் 80 லட்சத்தையும் மீட்டுத் தந்து என்னை நம்ப வைத்து மோசடி செய்த தம்பதியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.