தேர்தல் பிரச்சாரத்தில் லஜகவை புறக்கணித்த ரங்கசாமி
Mar 27, 2026, 19:59 IST1774621760194
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சார வாகனத்தில், லஜக கொடி இல்லாமல் ரங்கசாமி பேசியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டினின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை சேர்க்க, முதல்வர் ரங்கசாமி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அவரை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சமாதானம் செய்து லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கப்பட்டது. இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி தனது தொகுதியான தட்டாஞ்சாவடியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பிரச்சாரம் வாகனத்தில் ஏறி பேசினார். பிரச்சார வாகன முகப்பில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கொடி மட்டுமே இருந்தது. லஜக கொடி புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.+

