வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்- முதலமைச்சர் அதிரடி உத்தரவு

 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம், அரசு அழைப்பிதழ்களிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Puducherry Chief Minister Rangasamy skips NITI Aayog meeting in Delhi - The  Hindu


புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் பெயர் இடம் பெறுவது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். எழுத வேண்டும். வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழ் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்கள் தமிழில் தான் அச்சடிக்க வேண்டும்”  என்றார்.

பள்ளிகளின் தமிழ் மொழி கட்டாயம் குறித்த கேள்விக்கு, கையை உயர்த்தி வேண்டாம் என்று சைகை செய்து அந்த கேள்வியை ரங்கசாமி தவித்தார்.