புதுச்சேரி சாராய ஆலையில் 53 ஊழியர்கள் பணிநீக்கம்! போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

 
புதுச்சேரி சாராய ஆலையில் 53 ஊழியர்கள் பணிநீக்கம்! போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

புதுச்சேரி ஆரியபாளையம் சாராய ஆலையில் 53 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி, நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Liquor Factory,புதுச்சேரி மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்; சாராய ஆலையில்  ஊழியர்கள் திடீர் போராட்டம்! - sudden strike by employees at liquor factory  in puducherry - Samayam Tamil

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான வடி சாராய ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 53 ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.  இதனை எதிர்த்து ரவிக்குமார் என்பவர் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை, கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் 53 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமனம் ஆணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சாராய ஆலை நிர்வாகம் 53 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இதற்கான நோட்டீசை  சாராய ஆலையின் வெளிப்புறத்தில் ஒட்டபட்டது. இதனிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சாராய ஆலைக்கு வந்து முற்றுகையிட முயன்றனர். இது சம்பந்தமாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில்  இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

30 ஆண்டு முந்தைய மதுப்புட்டிகள்! பழைய சாராய ஆலை கட்டிடம் இடிக்கும் போது  சிக்கின! | nakkheeran

இதனிடையே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி, சாராய ஆலையில் பணிபுரிந்து வரும் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆலையில் இருந்து தினமும் விநியோகம் செய்யப்படும் 50,000 லிட்டர் சாராயம் விநியோகம் செய்யப்படாமல் தடைபட்டுள்ளது. ஆகையால் இன்று ஆலைக்கு கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 40 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டால், புதுச்சேரியில் உள்ள சாராயக் கடைகளில் சாராயம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.