புதுச்சேரியில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசக்கூடும்

 
summer

புதுச்சேரியில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை வீசக்கூடும், ஆகவே பொதுமக்கள் அதிகக்கூடும் இடங்கள் பூங்காக்கள், மருத்துவமனைகள் குழந்தைகள் இருக்கும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் மற்றும் காற்று வசதி, தேவையான மருந்துகள், செய்து தரப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

puducherry

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், “மாதந்தோறும் 15ஆம் தேதி விவசாயிகள் குறைக்க கேட்பு கூட்டம் நடத்தப்படும். அன்றைய தினமே மாலையில் அவர்களுக்காக தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு குறைகள் கேட்டு சரி செய்யப்படும். புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் புதுச்சேரி முழுவதும் நடைபெறும் சட்ட ஒழுங்கும் மற்றும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும். புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்பு புகார்கள் அதிகளவில் வருகின்றது. 

பெற்றோர்களை குழந்தைகள் அதிக அளவில் ஏமாற்றுவதாகவும், புகார்கள் வந்துள்ளது. அதனை தடுப்பதற்காக காவல்துறை துணையுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவில் வெப்ப அலை வீச கூடும் என மத்திய அரசு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மருத்துவமனைகள் பொழுதுபோக்கு கூடங்கள், கடற்கரை, பூங்காக்கள் உள்பட முக்கியமான இடங்களில் தண்ணீர் வசதிகள் காற்று வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பறவைகள், விலங்குகளுக்கு தேவையான இடங்களில் தண்ணீர் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். வெப்ப அலையை எதிர்கொள்வதற்காக சுகாதாரத்துறை மூலம் வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குழந்தைகள், பெரியவர்கள் தேவையான பாதுகாப்புகளையும் மருத்துவமனையில் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயண்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்படும். இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். புதுச்சேரியில் பேனர் வைப்பது சமூக பிரச்சினையாக உள்ளது. சாலை சந்திப்புகளில் பேனர்களை வைக்க வேண்டாம். குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், அண்ணா சிலை, அண்ணா சாலை காமராஜர் சந்திப்பு, ஆகிய முக்கிய சந்திப்புகளில் பேனர்களை வைக்க வேண்டாம். சட்டமன்ற கூட்டத்தொடரை பள்ளி குழந்தைகள் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளவார்கள்” என்றார்.