ஆளுநருக்கு முதல்வருக்கும் நல்ல நட்பு தேவை- தமிழிசை
ஆளுநருக்கு முதல்வருக்கும் நல்ல நட்பு தேவை... சில நேரங்களில் இருவருக்கும் இடையே தர்மயுத்தமே நடக்கிறது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை,”ஊடகவியலாளர்கள் இல்லாமல் அரசும் இல்லை, ஆட்சியும் இல்லை. முதல்வருக்கும், ஆளுநர்களுக்கும் நல்ல நட்பு இருக்க வேண்டும். சில நேரங்களில் இருவருக்கும் இடையே தர்மயுத்தம் நடக்கிறது. அப்படி இல்லாமல் ஊடகவியலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நல்ல நட்பு இருக்க வேண்டும். சில நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது போருக்கு செல்வது போல் உள்ளது.
மாமியாரும் மருமகளும் எப்படி இருக்கிறார்கள். எனக்கு மாமியாரும் மருமகளும் கலகலப்பாக இருக்கிறார்களா? என கேட்டதற்கு கைகலப்பாக இல்லை..கைகலப்பாக இருக்கிறார் என்று பதில் கூறி இருக்கிறார்கள். கலகலப்பாக இருக்க வேண்டியது சில நேரங்களில் கைகலப்பாகி விடுகிறது. குடும்பத்தை போல சில நேரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் அப்படி ஆகிவிடுகிறது” என்றார்.