“மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தீர்ப்பு பெற்றுத்தரப்படும்" - ஆளுநர் தமிழிசை பேட்டி

 
tamilisai

புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில்  9 வயது சிறுமி  கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த கால்வாயில் சிறுமியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.  இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

tn

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முதியவர்  மது போதைக்கும், 19 வயது இளைஞர் கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

tn

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக வழக்கை விரைவு படுத்த சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.  குற்றவாளிகளுக்கு பலர் உதவியுள்ளார்களா என்று சந்தேகம் உள்ளது; மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தீர்ப்பு பெற்றுத்தரப்படும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே விரைவு நீதிமன்றம் என்றார்.