புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு

 
z

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக, குரங்கு பெடல் திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள்  விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, அலையன்ஸ் பிரான்சே இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா வரும் அக்டோபர் 4ந் தேதி நடக்கிறது. புதுவை அரசு சிறந்த திரைப்படமாக குரங்கு பெடல் திரைப்படம் சங்கரதாஸ் சுவாமிகள்  விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் நடைபெறும் விழாவை முதல அமைச்சர் ரங்கசாமி தொடங்கி  வைத்து குரங்கு பெடல் திரைப்பட இயக்குனர் கமலகண்ணனுக்கு 2022ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதை  வழங்குகிறார்.

குரங்கு பெடல் திரைப்பட இயக்குனர் கமலகண்ணன் சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் கேசவன், நவதர்ஷன் திரைப்பட கழக செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சே தலைவர் சதீஷ்நல்லாம், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.  விழா நிறைவில் குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 5ந் தேதி முதல் 8ந் தேதி வரை நாள் தோறும் ஒரு பிராந்தியமொழி திரைப்படம் மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. 5-ந் தேதி சனிக்கிழமை ஆர்ஆர்ஆர் தெலுங்கு, 6ந் தேதி அரியிப்பு மலையாளம், 7ந் தேதி டோனிக் வங்காளம், 8ந் தேதி மேஜர் இந்தி படங்கள் திரையிடப்படுகிறது.