#EXITPOLL தமிழ்நாட்டில் விட்டதை புதுச்சேரியில் பிடித்த பாஜக

 
puducherry

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- என்ஆர்காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வரானார். 

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி கூட்டணி 16 முதல் 20 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி ஆறு முதல் எட்டு இடங்களையும், விஜய் தமிழக வெற்றி கழகம் இரண்டு முதல் நான்கு இடங்களையும் பிடிக்கும் என ஆக்சிஸ் இந்தியா தேர்தல் கணிப்பை வெளியிட்டுள்ளது.

People Pulse தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, NDA+ : 16 - 19 இடங்கள், CONG+ : 10 - 12 இடங்கள், TVK+ : 0 இடங்கள், OTH : 1 - 2 இடங்கள் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ​People Pulse கணிப்பின்படி புதுச்சேரியில் மீண்டும் என்.டி.ஏ (NDA+) கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.