புதுச்சேரியில் விரைவில் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தப்படும்- முதல்வர் ரங்கசாமி

 
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் புதிய அமைச்சர் விரைவில் நியமனம் செய்யபடும் என்று முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். 

புதிய அமைச்சர் விரைவில் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல் | New  Minister to be Appointed Soon: CM Rangaswamy Informs - hindutamil.in

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாம, “புதுச்சேரி அரசு மக்களுடைய அரசு. மக்கள் நலனுக்காக பாடுபடும் அரசு. மக்களுக்காக கொண்டுவரும் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தும் அரசு. அரசு பொறுப்பேற்றவுடன் பல புதிய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. குடும்ப தலைவிக்கு ரூ.ஆயிரம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி, சிலிண்டருக்கு மானியம், விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு லேப்டாப் விரைவில் வழங்கப்படும். 

உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அனைத்து பணிகளும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மூலம் நடந்து வருகிறது. புதுவைக்கு புதிய சட்டமன்றம் அவசியம், விரைவில் கட்டுவோம். புதுவையில் புதிய அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார். புதுவை அரசின் நிலை என்ன என அனைவரும் அறிந்தது. இந்த நிலை மாற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்” என்றார்.