புதுச்சேரி சிறுமி கொலை - ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

 
tn

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ₹20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

murder

புதுச்சேரியில் கொலை  செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது . உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்த நிலையில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

arrest

முன்னதாக புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி அவசர  ஆலோசனையில்  ஈடுபட்டார். சிறுமி கொலைக்கு நீதி வழங்கக்கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் இந்த அவசர ஆலோசனை நடைபெற்றது. சிறுமி கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.