முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!

 
1 1

புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி குழந்தைகளை நல உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் மக்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக ரேஷன்கடைகளில் இலவச அரிசி, கோதுமை வழங்கி வருகிறோம்.

தற்போது கேழ்வரகு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதையேற்று அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் சத்துணவுக்காக ஒருகிலோ கேழ்வரகு மாவு வழங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

ஏற்கனவே அரசின் எந்தவொரு உதவியும் பெறாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை விரைவில் ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

முதியோருக்கு அறிவித்த உதவித்தொகை உயர்வு ரூ.500 விரைவில் உயர்த்தி வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதியளித்தார். விழாவில் சபாநாயகர் செல்வம், எம்எல்ஏ ரமேஷ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துறை இயக்குனர் முத்துமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.