பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக விவரம் வெளியீடு

 
BUS

பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

bus

அரசு பேருந்துகளில் மற்ற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் உணவருந்துவதற்காகவும்,  இயற்கை உபாதைகளை கழிப்பதற்காகவும் நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.  அங்கு அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன் , கழிப்பறை தூய்மை இல்லாமலும்,  அதை பயன்படுத்த கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதாக பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

bus

இது குறித்து உணவு பாதுகாப்பு,  போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,  போதிய அடிப்படை வசதிகள் இல்லாத போக்குவரத்து துறையின் உரிமம் பெறாத உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புகார் இருந்தது.  எனவே பயணிகள் அறியும் வகையில் பேருந்து நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற உணவக பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில்,  தற்காலிக பேருந்துகளில் நிறுத்துவதற்கான உரிமம் பெற்ற 51 உணவகங்களின்  பட்டியலை அரசு பஸ் என்ற இணையதளத்தில் அனைவரும் அறியும் படி வெளியிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் பொதுமக்கள் அரசு பேருந்துகள் நின்று செல்வதற்கான உரிமம் பெற்ற பயண வழி உணவக விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.