இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு- மத்திய அரசு அறிவிப்பு

 
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..

இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொதுத்தேர்வு

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை வரைவை கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை வரைவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.  39 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி அமைக்கப்படும் இந்த கல்விக் கொள்கை, கல்விப் பாதையில் புரட்சியை உண்டாக்கும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால்  இந்த கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. குறிப்பாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த இந்த புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 தேர்வில் எதில் அதிக மதிப்பெண்ணோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் 
2 மொழி பாடத்தில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.