இன்று வெளியாகிறது 10, 11-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள்.! எத்தனை மணிக்கு.? எந்த இணையதளத்தில் பார்க்கனும்.?

 
1 1

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இந்தாண்டு முன்கூட்டியே கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (மே 16ஆம் தேதி ) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 10ஆம் வகுப்பு தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள் உள்ளிட்ட 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியுள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை 7557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதினர்.

 

இந்த நிலையில் இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகள் காலை 9 மணி முதல் இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவு இன்று (16.05.2025 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படும் எனவும் இந்த இணையதள முகவரி- https://results.digilocker.gov.in www.tnresults.nic.in தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவுசெய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.