சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொது மக்களுக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!!

 
govt

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொது மக்கள்  கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

tn

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  சுதந்திர தின விழாவையொட்டி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தமிழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

tn

இந்நிலையில் சென்னை மெரினாவில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . சுதந்திர தின விழாவிற்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்  வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ராஜாஜி சாலையில் போலீஸ் அணிவகுப்பு மற்றும் கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது ஆண்டாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.