தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் என்னென்ன?

 
school

தமிழகத்தில் நாளை 12ம்  வகுப்புக்கும், 6ம் தேதி 10ம் வகுப்புக்கும், 10ம் தேதி 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.  நாளை தொடங்கும் பொது தேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.  3,119 மையங்களில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர்.

School Education

இந்நிலையில் பொதுத் தேர்வு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

#பொதுத் தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்து வர தடை

#பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை

#பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் சம்பந்தப்பட்ட மாணவர் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை

#முறைகேடுகளுக்கு பள்ளி நிர்வாகம் துணை சென்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து

school

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்:-

#பொதுத் தேர்வின் போது மாணவர்கள் நீலம் அல்லது கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்

#வினாத்தாளில் எந்த தாளையும் கிழிக்கவோ ,  நீக்கவோ கூடாது

 #விடைத்தாளில் எந்த ஒரு குறியீடும் இடம்பெறக்கூடாது

 #விடைத்தாளை சேதப்படுத்த கூடாது 

#விடைத்தாளில் எந்த பக்கத்திலும் தேர்வு எண், பெயர் போன்றவற்றை எழுதக்கூடாது 

#வினா எண் எழுதாத அல்லது தவறான வினா எண் குறிக்கப்பட்ட விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது

#10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும்.  தேர்வுப் பணிகளில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள் , ஆசிரியர்களும் முகக்  கவசம் அணிந்து இருக்க வேண்டும்.