“அந்த 3 files...Private-ஆ நீங்க Action எடுக்க முடியாது... முதலில் அவையில் வைக்க வேண்டும்"- பிடிஆர்
என் கணிப்பில் இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது… யாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “முதல்வர் சொன்ன 3 Files குறித்து, Private-ஆ அவர் Action எடுக்க முடியாது. தணிக்கை அறிக்கையில் உள்ள விவரங்கள் ரகசியமாக இருக்க முடியாது. CAG தணிக்கை அறிக்கை முதலில் ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததும், அது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு நிதியமைச்சர் கையெழுத்திடுவார். அதன்பின், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த அறிக்கை சட்டமன்றத்தின் முன் வைக்கப்பட வேண்டும். பின்னர், அது பொதுக் கணக்குக் குழுவின் (PAC) ஆய்வுக்குச் செல்லும். அவர்கள் மூலமாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். தணிக்கை அறிக்கை இல்லாமலேயே அரசு எந்த ஒரு வழக்கமான நடவடிக்கையையும் எடுக்கலாம். ஆனால், இந்தத் தணிக்கை அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து அரசு தானாக நேரடியாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது. சபாநாயகர் JCD பிரபாகரன் நடுநிலையாக, சிறப்பாக செயல்படுகிறார். வரலாற்றில் சிறப்பு இடம் இவருக்கு இருக்கிறது. என் கணிப்பில் இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் எழுதியிருக்க முடியாது… யாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

