பதவிக்காகவோ, பொறுப்பிற்காகவோ எனது கொள்கை மாறாது- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 
ptr

பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ எனது கொள்கையும், தத்துவமும் என்றும் மாறாது என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

PTR says second audio also fabricated, alleges it's the handiwork of a  blackmail gang- The New Indian Express

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் உருவப்படங்கள் மற்றும் உடைமைகள் வைப்பு அறை திறப்பு விழா நடைபெறுகிறது. இதில்  உயர்நீதி மன்றம் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா, தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவியேற்றப் பின் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “நான் இந்நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்கவில்லை.. ஒரு மகனாக பங்கேற்கிறேன்.  ஒரே ஒரு கருத்தை மட்டும் நான் கூறி விடைபெறுகிறேன். என் தாத்தாவும் தந்தையாரும் வழக்கறிஞர்களாக இருந்து இதே நீதிமன்றம் உருவாக்குவதற்கும் அதே போல் வாதாடுவதற்கும் வாய்ப்பு பெற்றவர்கள். நான் என் தந்தையால் வேற தொழிலுக்கு வழிகாட்டப்பட்டவன் என்பதனால் நான் வழக்கறிஞராக வில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் வரலாற்றில் நானும் இந்த நீதிமன்றத்திற்கு ஏதோ ஒரு உதவி செய்ய வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்ததினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

PTR loses finance portfolio, but TN cabinet rejig was not only about him

நான் பல ஆண்டுகளாக வைத்திருக்கிற கொள்கை தனிப்பட்ட நபராக என் அடையாளம் என்னவென்று நான் விரும்புவேன் என்றால் பொறுப்புக்காகவோ பதவிக்காகவோ அரசாங்கத்தில் இருக்கிறதுக்கோ இல்லை எதிர்க்கட்சியாக இருக்குறதுக்கோ பொது வாழ்க்கையில் இருப்பதுக்கோ தனிநபராக இருக்குறதுக்கோ என்றைக்குமே என்னுடைய கொள்கையும் தத்துவம் மாறாது” என்றார்.