அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 
ptr

மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Finance Minister PTR Palanivel Thiaga Rajan Stopped At Chennai  Airport For Carrying Two Laptops


மதுரை மூன்று மாவடியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 20 இலட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் குத்து விளக்கு ஏற்றினார்கள், 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "மதுரையில் 48 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4 வது வாரத்தில் நடைபெறும், பாராளுமன்ற கூட்டம், சுதந்திர தினம் வருவதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளி போகிறது, அதிமுக ஆட்சியில் ஊழலில் கொடூர ஊழல் நடந்துள்ளது, கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது, இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக் கொண்டோம், மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை, மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, திமுக ஆட்சி காலத்திற்க்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடைக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்" என கூறினார்