இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தந்தை இறப்பு பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார் பிடிஆர்.பழனி தியாகராஜன்.

 
s

இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தந்தை இறப்பு பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார் பிடிஆர்.பழனி தியாகராஜன்.

PTR recalls saving hundreds of patients' lives during COVID-19 pandemic in  Madurai - The Hindu

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிடும் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேல மாசி வடமாசி வீதி சந்திப்பில் முடித்தார்.அப்போது பேசியவர், தொகுதி மக்களின் அன்பு மற்றும் பாசத்திற்கு நன்றி என்றார். என்னுடைய தந்தையினுடைய இறப்பு செய்தி வரும் பொழுது நான் தூக்கி அதில் பணி நிமித்தமாக இருந்தேன் என அவர் பேசும் பொழுது தன்னை மீறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது கலைஞர் மீண்டும் என் தந்தையின் தொகுதியிலேயே போட்டி போட்டு  அமைச்சராக அழைத்தார். ஆனால் என்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்ததால் அப்போது என்னால் வர முடியவில்லை பிறகு மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து கலைஞர் என்னை அழைத்து வந்தார். கலைஞருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்
தந்தை பற்றிய பேசிய போது கண்ணீர் விட்டு அழுதார். அப்போது தொண்டர்கள் உணர்ச்சிபெருக்கில் கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் தொடர்ந்து பேசியவர் இந்த 5 ஆண்டு பொற்காலம். பொருளாதாரம் ,தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது. இந்த ஆட்சியில்.குழந்தைகள் இறப்பு வீகிதம் குறைக்கப்பட்டுள்து என்றார். பணம் வாங்காமல் உங்களால இரண்டு முறை வென்றேன் என தெரிவித்தார். இன்று உலக பொருளாதாரம் மோசமாகி வருகிறது.தேர்தலுக்காக பெட்ரோல் .,கேஸ் உயர்வை விலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் தகவல் தொழில் நுட்பம் காரணமாக. உலக சூழ்நிலை மாறி வருகிறது.இது முக்கியமாக கால கட்டம் எனவே திமுகவிற்கு வாக்களிக்க கேட்டு கொண்டார்.