ராகிங்: 7 மாணவர்கள் சிறையில் அடைப்பு

 
tnt

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவருக்கு சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்துள்ளனர் . மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவர் தாக்கி மொட்டை அடித்துள்ளனர்.

arrest

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதன் அடிப்படையில் சீனியர் மாணவர்கள் மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய ஏழு மாணவர்களை பீளமேடு  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் 7 பேரையும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.