மூடப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து தமிழ் வழி கல்விச் சான்றிதழ் - நெறிமுறைகள் வெளியீடு

 
govt

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து தமிழ் வழி கல்விச் சான்றிதழை பெறுவது தொடர்பான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

tn govt

தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களில், இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு அச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.

mk stalin
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் திருத்தச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட பதவிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பணி விதிகளில், நேரடி நியமன முறைக்காக வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட 20 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.