சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை போரூர் வானகரம் சுங்க சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இந்தியா என்ற பெயரை கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அதை ஏற்கக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தேர்தலுக்காகவும் கட்சிக்காகவும் கிடையாது மக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாட்டின் பெயரை மாற்றுவது என்பது எளிதல்ல என்றார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாடு சுங்க சாவடி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தேமுதிகவினருக்கும் போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.