திருப்பரங்குன்றத்தில் போராட்டம்- 195 பேர் மீது வழக்கு

 
s

திருப்பரங்குன்றத்தில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் கூட்டமாக கூடிய 195 பேர் மீது 2 வழக்குகள் 3 பிரிவுகளில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

144 தடையை மீறி திருப்பரங்குன்றத்தில் "மலையை காப்போம்" போராட்டத்தில் ஈடுபட வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த 87 பேரும், திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரும், திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சஷ்டி மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரும் என 195 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் காவல்துறை தடவுத்துறை மீறிய இந்து அமைப்புகள் மீது பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல், வன்முறை தூண்டும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.