எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து போராட்டம்; விசுவ ஹிந்து பரிஷத் அறிவிப்பு..!
விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அறிக்கை:
தமிழக சட்டசபையில், 'சனாதன தர்மத்தை அழிப்போம்' எனக்கூறி, தன் ஹிந்து மத வெறுப்பை, உதயநிதி வெளிப்படுத்தி உள்ளார். ஏற்கனவே சனாதன தர்மத்தை, டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் சட்டசபையிலேயே, இத்தகைய இழிவான கருத்தை பேசியிருப்பதை கண்டிக்கிறோம்.மக்களின் முக்கிய பிரச்னைகளை விவாதிக்காமல், மத அரசியலை செய்யவே, உதயநிதி விரும்புகிறார்.
இந்த அருவருக்கத்தக்க பேச்சை அவை குறிப்பிலிருந்து, சபாநாயகர் உடனடியாக நீக்க வேண்டும். உதயநிதி மீது, சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடியும் வரை, அவரை சபையிலிருந்து நீக்கி வைக்க வேண்டும். சட்டசபையின் கண்ணியத்தை காக்க, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இது குறித்து காவல்துறை மற்றும் தமிழக கவர்னரிடம், புகார் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

