கொடைக்கானலில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

 
ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ரவி நாளை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வருகை தருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் போராட்டம்  செய்த நிலையில், அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்வம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று கொடைக்கானல் வருகை புரிய உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் கொடைக்கானலுக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உகார்தேநகர் பகுதி பிரதான சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . 

rn ravi

தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர் . சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் ஆளுநர் ரவி, அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் செல்கிறார். இதனை முன்னிட்டு கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.