ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்து! யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
Highcourt

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Received the distinction of being Chennai's first flyover Anna Overpass  celebrated her 48th birthday | சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை  பெற்ற அண்ணா மேம்பாலம் தனது 48-வது பிறந்த ...

சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி கதிட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி 'தோட்டக்கலைச் சங்கம்' என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வந்தார். இதை மீட்க கடந்த 1989ஆம் ஆண்டே அரசு எடுத்தது. நடவடிக்கைக்கு  எதிராக தாக்கல்  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என  உறுதி செய்தது. பின்னர், அங்கு அமைந்திருந்த டிரைவ் இன் உணவு விடுதி அனுபவித்த 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, தோட்டக்கலை துறை சார்பில் செம்மொழி பூங்கா அமைத்தது.

அந்த நிலத்திற்கு எதிரில் 6.36 ஏக்கர் நிலத்தில் இருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு  உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த நிலம் சங்கத்திற்கே சொந்தமானது  உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் நில நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், தானாக முன்வந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறுத்திவைத்து, ஏன் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தோட்டக்கலை சங்கத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

Madras High Court Grants Mother Nature 'Living Being' Status With Rights  And Duties

இந்த நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் ,அரசு நிலத்திற்கு உரிமை கோரிய தோட்டக்கலை சங்கத்தின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.. தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் நில நிர்வாக ஆணையரின் நடவடிக்கை சரிதான் என்றும் வாதிட்டார் .வழக்கில் இடையிட்டு மனுதாரர் புவனேஷ் குமார் சார்பாக ஆஜராக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலைமை என்றும் மீட்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

.