கல்லூரி விரிவுரையாளர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

 
assembly

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியில் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

professor college tamilnadu

இது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலர் அ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 220 இடங்களுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 1311 இடங்களுக்கும் கல்லூரி முதல்வர்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் பகுதி நேர விரிவுரையாளர்களை மாதம் ரூபாய் 15,000 சம்பளத்தில் நியமிக்க அனுமதி வழங்கி 2019ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரின் பரிந்துரைப்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியத்தை 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி 2021ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அரசுக்கு அடித்த பரிந்துரை கடிதத்தில்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பகுதிநேர கவுரவ விரிவுரளர்களுக்கான ஊதியத்தை 25,000 ஆக உயர்த்தவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்று விரிவுரையாளர்களுக்கு 20,000 ஆக சம்பளம் உயர்த்தி  வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் படி, அரசு பொறியியல் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் முழுநேர விரிவுரையாளர்களுக்காம மாத ஊதியம் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ஆகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் முழு நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 15,000 யிலிருந்து 20,000 ஆக உயர்த்தியும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் உயர்த்தியும் ஜூன் 2023 முதல் அடுத்த ஓராண்டுக்கு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

assembly

மேலும் அரசுப் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள 347 இடங்கள், அரசு பாலிடெக்னிக் காலியாக உள்ள 702 இடங்களுக்கு முறையை 25 ஆயிரம் மற்றும் 20,000  ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் முழு நேர பயிற்றுநர்களை நியமிக்க அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு அனுமதி அளித்தும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் 7,374 கவுரவ விரிவுரையாளர்களும், அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் 1049 பகுதிநேர விரிவுரையாளர்களும் சம்பள உயர்வை பெறுவர். இதற்காக 40 கோடியே 55 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.