சிவகங்கையில் 144 தடை உத்தரவு..!

 
1

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அக். 24-ல் அரசு சார்பிலும், அக். 27-ல் காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பிலும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, அக். 30-ல் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் அக். 31 வரை BNSS 163(1) (பழைய 144) தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24-ந்தேதி மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவு தின நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடை பெற உள்ளது. இதில் பங்கேற்ற தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.

இதை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் 31-ந்தேதி வரை பி.என்.எஸ்.எஸ். தடைச்சட்டம் 163 (1) கீழ் (பழைய சட்டப்படி 144) தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.