மதிய நேரத்தில் வேலை செய்யத் தடை! ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சாலை மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, மதிய நேரப்பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுத்தியுள்ளது. தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்துப் பணிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.தார் ஊற்றுதல், வெல்டிங் போன்ற அதிக வெப்பத்தை உருவாக்கும் வேலைகளை அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக நிழற்குடைகள், சரியான காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வு அறைகள் மற்றும் தடையற்ற குளிர்ந்த குடிநீர் வசதி செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணி நடக்கும் பகுதிகளில் முதலுதவி மையங்கள் மற்றும் ஓஆர்எஸ் மற்றும் குளுக்கோஸ் இருப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ்களில் ஐஸ் பேக்குகள் மற்றும் ஐவி திரவங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சுங்கச்சாவடி ஊழியர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவதைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

