பேராசிரியர் முருகன், கருப்பசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!!

 
tn

மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று  சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

tn

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த விவகாரத்தில்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன்,  ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கானது சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றப்பட்டது.   ஸ்ரீவில்லிபுரத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி  குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 2வது மற்றும் 3வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில்  சிபிசிஐடி வழக்கறிஞர் சந்திரசேகரன் செய்தியாளர்களை சந்தித்த போது,  கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். கருப்பசாமி, முருகனுக்கு எதிராக சாட்சியம் அளித்த மதுரை காமராஜர் பல்கலை. ஊழியர்கள் பிறழ் சாட்சியாக மாறியதன் காரணமாக இருவரும் விடுதலை ஆகியுள்ளனர்; ஆனால் தண்டனை வழங்கக்கூடிய அளவிற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவே அரசு தரப்பு கருதுகிறது என்று தெரிவித்தார்.