முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன்

 
tn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார். 

stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததையொட்டி தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், இராமநதாபுரம் தொகுதி வேட்பாளர் கே. நவாஸ்கனி, மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தேர்தலின்போது அளித்த ஒத்துழைப்பிற்கும் தி.மு.க. ஆற்றிய பணிக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

tn

இந்நிகழ்வில் எம்.எஸ்.எஃப். மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது, திருச்சி மணிச்சுடர் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, வடசென்னை ஏ.கே. முஹம்மது ரபி ஆகியோர் உடனிருந்தனர்.