சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமனம்!!

 
iit

சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறந்த முறையில் படித்து முடித்து பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்கள்.

iit

இந்நிலையில் சென்னை ஐஐடி இயக்குநராக பதவி வகித்து வந்த பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியின்  பதவி காலம் முடிவடைந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது புதிய இயக்குநராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் துறை பேராசிரியராக உள்ள காமகோடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஐஐடியின் இயக்குநராக பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

iit

கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணம், சாதி ரீதியான பாகுபாடு  உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்த போது அதன் இயக்குனராக பதவி வகித்தவர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி.  இவரின் 10 ஆண்டுகால பதவியானது முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் டெல்லி ஐஐடி  இயக்குநராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குநராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா, மும்பை ஐஐடி பேராசிரியர் சுகாஸ் ஜோஷி இந்தூர் ஐஐடி  இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.