ரூ.16 கோடி ஏமாற்றியதாக திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கைது

 
Ravindhran

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தனியார் நிறுவனத்திடம் 16 கோடி ஏமாற்றியதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாலர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் லிப்ரா புரொடக்‌ஷன் என்ற பெயரில் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். தமிழில் இவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகை மகாலட்சுமையை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பேசு பொருளானது. இந்த நிலையில், இவர் திரைப்படம் தயாரிப்பதாக கூறி தனியார் நிறுவனத்திடம் இருந்து 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக ரவீந்திரன் சந்திரசேகர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தனியார் நிறுவனத்திடம் 16 கோடி ஏமாற்றியதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக ரவீந்திரன் சந்திரசேகர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடதக்கது.