"இந்த பாட்டுக்கு என்ன விலை கேட்டாலும் தருவேன்" - தயாரிப்பாளர் தாணுவை கவர்ந்த 'எப்படி கீர' பாடல்!!

 
tn

 "சென்னையில பேசுறதெல்லாம் தமிழா? அந்த மொழியில ஒரு மரியாதையே இல்ல" என்பது  தென் தமிழகத்தில்  இருந்து சென்னைக்கு வருபவர்களின் கருத்தாக இருக்கும். ஆனால் உண்மையில் மதுரை தமிழ், கொங்கு தமிழ், கரிசல் தமிழ் போல் சென்னையில் பேசுவதும் ஒரு வட்டார வழக்கு தான். அப்படி பேசுவது தான் சென்னை  தமிழ். அப்படிப்பட்ட சென்னை பாஷையில் ஒரு தனி பாடல் அதுவும் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றை பற்றி வெளிவந்தால் அதை கேட்க கசக்குமா என்ன? 

tn

ஆமாங்க...கீரைகளின் முக்கியத்துவத்தையும், அதன் வகைகளையும் சொல்லும்படி சென்னை பாஷையில் உருவாகியுள்ளது  'எப்படி கீர' தனிப்பாடல்.  திரு. ஹர்மீத் மன்சேடா இசையில், திருமதி. சுதாராஜம் குரலில் உருவாகியுள்ளது. இப்பாடலுக்கு ஹெச்.என். நந்தினி சுரேஷ் நடனம் அமைக்க, ஹரிணி ராதாகிருஷ்ணன் நடனமாடி  நடித்துள்ளார். 

tn

அந்த வகையில் சென்னை பாஷையில் உருவான 'எப்படி கீர' என்ற தனிப்பாடல் வீடியோவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட 'இசைக்கவி' ரமணன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் தாணு, "பாட்டு நான் கேட்டேன்.  சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் இந்த பாடலை நான் இசையமைப்பாளரிடம்  சொல்லி படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?  என்று கேட்டேன்.  தாராளமாக செய்யுங்கள் என்றனர்.  உடனே நான் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு இந்த பாடலை அனுப்பினேன்.  அவர் கேட்டுவிட்டு பாடல் நன்றாக இருக்கிறது. ஏதாவது படம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.  இந்த பாடல் நிச்சயம் ஒரு சிறப்பான இடத்தை பிடிக்கும்.  'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' என்ற பாடல்  முள்ளும் மலரும் படத்தில் வரும். இளையராஜா இசைமைத்த அந்த பாடலுக்கு மேலாக இந்த பாடல் வரும்.  அப்படிப்பட்ட சாதனையை,  ஒரு சகாப்தத்தை படைக்கக் கூடிய எப்படி கீர பாடலின்  பாடலின் உரிமையை   நிச்சயமாக எனக்கு தான் கொடுக்க வேண்டும்.  அதற்கு என்ன விலை கேட்டாலும் தருவேன்.  அதுமட்டுமல்லாமல் இந்த குரலை பயன்படுத்தவும் எனக்கு அனுமதி தர வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். சென்னை பாஷையில் உருவான எப்படிகீர  தனிப்பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு டாப் தமிழ் நியூஸ் https://www.youtube.com/c/TopTamilNews யூட்யூப் சேனலில் வெளியாகவுள்ளது.