ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல்
Jan 2, 2026, 18:59 IST1767360576836
ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து டிசம்பர் மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. அந்தப் படத்தை தணிக்கைக் குழு கடந்த 19ஆம் தேதி பார்த்து சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறினர். அதன்பின் தணிக்கைக் குழு சொன்ன மாற்றங்களை செய்து அனுப்பிய பிறகும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவர் 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு திரையரங்க ஒப்பந்தங்கள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.


