நயினார், வானதி சீனிவாசனுடன் அண்ணாமலை உச்சக்கட்ட மோதல்! பரபரப்பு காரணம்

 
அண்ணாமலை வானதி சீனிவாசன் இடையே மோதல்- பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம்

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு கால தாமதமாவதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்குமான மோதல் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Image

சிங்காநல்லூர், கவுண்டம்பாளையத்தை எதிர்பார்த்திருந்த அண்ணாமலை, அங்கு அதிமுக போட்டியிடுவதாக அறிவித்ததால் ஏமாற்றத்தில் உள்ளார். இதற்கு பின்னால் வானதி சீனிவாசன் இருப்பதாக நம்பும் அண்ணாமலை வானதி சீனிவாசன் நிற்க உள்ளதாக கூறப்படும்  கோவை வடக்கு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று பியூஸ் கோயல் தொடங்கி, அமித்ஷா வரை முறையிட்டுள்ளார்.  இதனால் பாஜக தலைமை வேட்பாளரை அறிவிப்பது பெரிய போராட்டமாக மாறி உள்ளது. வானதியை அறிவித்தால் அண்ணாமலை ஏற்க மாட்டார், அண்ணாமலையை அறிவித்தால் வானதி ஏற்க மாட்டார். இருவருமில்லாமல் வேறு புதிய நபரை அறிவிக்கலாமா என்றும் பாஜக தலைமை யோசித்துவருகிறதாக சொல்லப்படுகிறது. இன்றோ , நாளையோ வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் ரேஸில் வெல்ல போவது யார் அண்ணாமலையா .? வானதியா.? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும். 

இதேபோல் தமிழ்நாட்டு தேர்தல் வேலைகளில் துளியும் முகம் காட்டாமல் சுற்றும் அண்ணாமலை புதுச்சேரியில் பரப்புரைக்கு சென்றிருக்கிறார். ஏற்கனவே பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை இல்லாதது தலைப்பு செய்தியானது. தளி தொகுதி தனக்கு வேண்டும் என அமர் பிரசாத் ரெட்டி கேட்க, ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நயினார் தற்போது முகத்துக்கு நேராகவே “அண்ணாமலை ஆளுக்குலாம் வாய்ப்பு இல்லை. நீ எவன் கிட்ட வேணாலும் போய் சொல்லு உனக்கு சீட்டு கிடையாது” என்று வெடித்திருக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட அண்ணாமலை, நயினார் அரசியலை தீர்த்துகட்ட முடிவெடுத்து “கோவை வடக்கில்” தான் போட்டியிட விரும்புவதாக புது வெடியை வீசி இருக்கிறார்.